நந்தன் பட பாணியில் கொடூரம்! பின்னணியில் திமுக நிர்வாகி! கொந்தளிக்கும் இயக்குனர் இரா.சரவணன்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனாங்கூர் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராகப் பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பொதுமக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை நிர்வாகம் செய்யவிடாமல், அதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா மற்றும் அவருடைய கணவரான திமுக கிளைச் செயலாளர் குணசேகர் ஆகியோர் பல்வேறு வகையில் சாதி ரீதியாக இடையூறு செய்து வந்ததாக அவரே ஒரு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

மேலும், சங்கீதா அதிகாரிகளிடம் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் திமுக கிளை செயலாளர் குணசேகர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அமைப்பு ஒன்றுக்கு சங்கீதா பேட்டியளித்துள்ளார். அதன் காணொளி கீழே காணவும்:

இந்நிலையில், நந்தன் திரைப்பட இயக்குனர் இரா.சரவணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார். பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள்.

இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம். ‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை?  என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aanangkoor Village President issue DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->