விலை ராக்கெட் வேகத்தில் ஏற்றம்...! தங்கம், வெள்ளி இரண்டும் புதிய உச்சம் தொட்டன...! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை மீண்டும் ‘ராக்கெட் வேகம்’ எடுத்து, சந்தையை அதிரவைத்துள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) வரை சற்று மந்தமாக இருந்த தங்க விலை, இம்மாத தொடக்கத்திலிருந்து திடீர் திருப்பத்தை எடுத்துள்ளது. அதன் உச்சமாக, கடந்த 15ஆம் தேதி, சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,515-க்கும் ஒரு சவரன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு, வரலாறு காணாத இமாலய உச்சத்தை தொட்டது.

இதுவரை இல்லாத அளவில் ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற எல்லையை தாண்டிய தங்க விலை, பொதுமக்கள் மட்டுமல்ல முதலீட்டாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அதற்கு மறுநாளே தங்கம் விலை திடீரென சரிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த சரிவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை; மீண்டும் மெதுவாக உயரத் தொடங்கியது.இவ்வாறு ஏற்றத் தாழ்வுடன் நகர்ந்த தங்க விலை, நேற்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து சந்தையில் பரபரப்பை கிளப்பியது.

நேற்று முன்தினம், ஒரு கிராம் ரூ.12,400-க்கும் ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.80, சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. பிற்பகலில் மீண்டும் கிராமுக்கு ரூ.90, சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது.இதன் மூலம், ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170, சவரனுக்கு ரூ.1,360  உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,570-க்கும் ஒரு சவரன் ரூ.1,01,560-க்கும் விற்பனையானது.

முன்னதாக கடந்த 15ஆம் தேதி பதிவான ரூ.1,00,120 என்ற உச்சத்தை தற்போது தங்கம் விலை ‘ஓவர்டேக்’ செய்து, புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.இந்த விலை ஏற்றத்திற்கு, உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பது, பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுவது, பெருமுதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி கவனம் செலுத்துவது, பல நாடுகளில் போர் பதற்றம் தொடர்வது போன்றவை முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, தங்க விலை உயர்வுக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்துள்ளது. இதன் தாக்கத்தால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் பாய்கிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியும் தங்கத்தை பின்தொடர்ந்து உச்சம் தங்கம் போலவே, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.234-க்கும், பார் வெள்ளி ரூ.2,34,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prices soaring at rocket speed Both gold and silver reached new highs What todays prices


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->