அரசியலில் திடீர் திருப்பம்..புதுக் கட்சி வேண்டாம்! காளியம்மாள் எடுத்த அதிரடி முடிவு! அதிமுகவில் இணையும் காளியம்மாள்? - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்களை ஒருங்கிணைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள், புதிய அமைப்பு ஒன்றை தொடங்கலாம் என பேசப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் நீக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், தனது அடுத்த அரசியல் பயணம் குறித்து அவர் தெளிவான முடிவெடுக்காமல் இருந்தார். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம், “நிச்சயம் ஒரு கட்சியில் இணைவேன்; அதற்கான அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்பே வரும்” என கூறி வந்தார். இதற்கிடையே, முதற்கட்டமாக அதிமுகவுடனும், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்துடனும் (தவெக) அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவரது வருகையைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக மேலிடம் காளியம்மாளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில், நாகப்பட்டினம் தொகுதியை ஒதுக்க வேண்டும், பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காளியம்மாள் முன்வைத்ததாகவும், அவற்றுக்கு பாஜக மேலிடம் சாதகமான அணுகுமுறை காட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதே சமயம், காளியம்மாள் நேரடியாக பாஜகவில் சேர்வதைவிட, ஒரு புதிய அமைப்பை தொடங்கி அதன் மூலம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான பெண்களை காளியம்மாள் ஒருங்கிணைத்து வருவதாகவும், அவர் எப்போது வேண்டுமானாலும் புதிய அமைப்பை அறிவிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தரும் போது, அதிமுக–பாஜக இறுதி கூட்டணி அறிவிக்கப்பட உள்ளதாகவும், அந்த மேடையில் காளியம்மாளும் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது எதிர்பாராத திருப்பமாக, புதிய அமைப்பு தொடங்கும் திட்டத்தையும், பாஜகவில் இணையும்தையும் காளியம்மாள் கைவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கூட்டணிகளுடன் கூட புதிய அரசியல் அமைப்புகளையும் இணைத்து வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியை விரைவாக இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ச்சியான ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த சூழலில்தான், இன்று மாலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நாகப்பட்டினம் மாவட்ட அரசியலிலும், அதிமுக–பாஜக கூட்டணி வியூகத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A sudden turn in politics No new party Kaliammal dramatic decision Will Kaliammal join AIADMK


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->