உதயநிதியை பாராட்டிய ஆ.ராசா—‘தம்பி வா.. இயக்கத்தை வழிநடத்து..’ உரிமையோடு அழைத்த ஆ.ராசா.. உணர்ச்சிவசப்பட்ட உதயநிதி!
A Raja praised Udhayanidhi Brother come lead the movement A Raja rightly called out Udhayanidhi was emotional
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மாநிலம் முழுவதும் இளைஞரணி கூட்டங்களை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் முதல்கட்டமாக திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா உரையாற்றிய போது, உதயநிதி ஸ்டாலினின் பணித்திறனை கொண்டாடி, அவரை எதிர்கால இயக்கத் தலைவர் என உயர்த்திப் பேசியது கவனத்தை ஈர்த்தது.
ராசா தனது உரையில், “29 மாவட்டங்களில் இருந்து இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒழுங்காக திரட்டியதற்காக உதயநிதிக்கு என் சல்யூட்” என்று தொடங்கி, திமுக வரலாற்றின் பல முக்கிய தருணங்களை எடுத்துக்கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்களின் தத்துவங்களை செயல்பாட்டில் கொண்டு வந்த தலைவர்களாக அவர்கள் இருந்ததை நினைவூட்டிய ராசா, அதே பாரம்பரியத்தை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தாங்கிக்கொண்டு வருகிறார் என்பதையும் வலியுறுத்தினார்.
உதயநிதியின் செயல்பாடுகளைப் பற்றி அவர் தொடர்ந்து, “விளையாட்டு துறையை வைத்து இவ்வளவு சாதனைகளை செய்த அமைச்சரை இந்தியாவில் பார்த்ததில்லை. கலைஞரின் பேரன் என்பதாலும், ஸ்டாலினின் மகன் என்பதாலும் மட்டும் இல்லை… தன்னுடைய உழைப்பாலும் தகுதியாலும் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்” எனக் கூறினார்.
மேலும், சனாதனத்தின் மீது உதயநிதி தெரிவித்த கருத்தை நினைவுபடுத்தி, “20 உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அவர் பயப்படவில்லை. கொள்கையில் நிலைத்து நின்றார். அதற்காகவே அவரை ஏற்றுக்கொள்கிறேன்” என பாராட்டினார்.
உரையின் உச்சத்தில், “தம்பி வா… எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை நடத்த!” என்று உரிமையோடு அழைத்த ராசாவின் வார்த்தைகள் கூட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ராசாவின் உரையை கவனமாக கேட்ட உதயநிதி, புன்னகையுடன் நெகிழ்ச்சி வெளிப்படுத்தி நன்றி தெரிவித்தார்.
English Summary
A Raja praised Udhayanidhi Brother come lead the movement A Raja rightly called out Udhayanidhi was emotional