ஜனவரி 06-இல் முதல்வராக பதவியேற்கும் டி.கே. சிவகுமார்..? கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உறுதி..!
A Karnataka Congress MLA has confirmed that DK Shivakumar will be sworn in as Chief Minister on January 6th
2023-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் காங்கிரசின் சித்தராமையா முதல்வராக உள்ளார். அவர் முதல்வர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலை,டி.கே. சிவகுமாரை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
முதல்வர் பதவிக்கான இந்த மோதலில், அம்மாநில அரசியலில் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும் உற்று நோக்கப்படுகிறது. டில்லி காங்கிரஸ் தலைமையின் சமரச பேச்சைத் தொடர்ந்து, சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் பரஸ்பரம் விருந்தளித்து தங்களின் ஒற்றுமையை பறைசாற்றினர். ஆனாலும், இருவர் இடையிலும், அவர்களின் ஆதரவாளர்கள் இடையிலும் சண்டை ஓய்விலிருந்தது.

இந் நிலையில், மீன்றும் முதல்வர் பதவி சண்டை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் மூலம் அறியக்கிடைக்கிறது. இந்த சூழலில் வரும் ஜனவரி 06-ஆம் தேதி டி.கே. சிவகுமார் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்பார் என்று ராமநகரா எம்எல்ஏ இக்பால் ஹூசைன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும், கூறியுள்ளதாவது: வரும் ஜனவரி 06-ஆம் தேதி 99 சதவீதம் கர்நாடகாவின் முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்க வாய்ப்புள்ளது. எல்லோரும் இதையே தான் சொல்கின்றனர். ஜனவரி 06 அல்லது ஜனவரி 09 இந்த இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றில் அவரின் பதவியேற்பு நடைபெறும் என்று இக்பால் ஹூசைன் கூறியுள்ளார்.
English Summary
A Karnataka Congress MLA has confirmed that DK Shivakumar will be sworn in as Chief Minister on January 6th