ஆட்சி அமைக்கப்போவது யார் என்று தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் இவர்கள் தான்..!! - Seithipunal
Seithipunal


ஆட்சி அமைக்கப்போவது யார் என்று தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் இவர்கள் தான்..!!

பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மாலை 6மணியில் இருந்து ஓட்டுப்பதிவுக்கு பிறகான கருத்துக்கணிப்புகள் வரத் தொடங்கிவிடும். இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் வாக்குகள் பதிவான சதவீதத்தை வைத்து அரசியல் நிபுணர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் படி, இந்த பாராளுமன்றத் தேர்தலில் 4 மாநிலங்கள் தான் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பீஹார், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்கள் தான்  இந்த பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன. இந்த மாநிலங்களில் மொத்தம் 151 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 

வழக்கமாக உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய 2 மாநிலங்களில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும்  என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இம்முறை உத்தரபிரதேசத்தில் பாஜக தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜகவும், காங்கிரசும் தான் அதிக இடங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆனால் இம்முறை பல இடங்களில் பாஜக மாநிலக் கட்சிகளுடன் மோதியுள்ளது. இதனால் தான் இந்த 4 மாநிலங்கள் இந்த முறை ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாக மாறியுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 King Makers who will Determine The Ruling Party in Centre


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->