77வது குடியரசு தினம்: கடமைப்பாதையில் தமிழகத்தின் வீர மரபு… ஜல்லிக்கட்டு காட்சியுடன் வாகன அணிவகுப்பு
77th Republic Day Tamil Nadu heroic tradition path duty tableau features Jallikattu scene
77வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமைப்பாதையில் நடைபெற்ற தேசிய அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார வாகனம் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து சிறப்பான இடத்தை பிடித்தது.தமிழக வாகனத்தின் முன்புறத்தில், பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிக் கொள்ளும் மாடுபிடி வீரர்களின் காட்சி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் வீரத்தையும் பண்பாட்டையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் இந்த வடிவமைப்பு பாராட்டுகளை குவித்தது.
அலங்கார வாகனத்தின் இருபுறங்களிலும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடியபடி அணிவகுத்துச் சென்றனர்.
இதன் மூலம் தமிழகத்தின் கலை மரபும் பண்பாட்டு பெருமையும் தேசிய மேடையில் ஒளிவிட்டது.இதனைத் தொடர்ந்து அசாம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல் பிரதேசம், ஜம்மு–காஷ்மீர் மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுத்தன.
மேலும் கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களின் வாகனங்களும் விழாவுக்கு வண்ணமூட்டின.
தமிழகத்துக்குப் பின் புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுத்து தேசிய விழாவை கோலாகலமாக்கின.
English Summary
77th Republic Day Tamil Nadu heroic tradition path duty tableau features Jallikattu scene