அழுத்தமா நமக்கா? விஜய்யின் அனல்பறக்கும் பேச்சு! - ‘கைகட்டி நின்றவர்’ என விமர்சித்த கே.என்.நேரு
Pressure Vijay fiery speech KN Nehru who criticized him one who stood folded hands
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக செயல்வீரர்கள் மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.
“அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்?” என அவர் மேடையிலேயே உரக்க கேள்வி எழுப்பி, ஜனநாயகம் தொடர்பான விவகாரம், கரூர் கூட்டநெரிசல் மற்றும் சிபிஐ விசாரணை குறித்த நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, விஜயை கடுமையாக விமர்சித்தார்.
“ஒரு நடிகர் இப்போது அரசியல் கட்சி தொடங்கி, செயல்வீரர்கள் கூட்டத்தில் வீர வசனம் பேசுகிறார். ‘அழுத்தத்திற்கு நான் பயப்படமாட்டேன்’ என்று சொல்கிறார். ஆனால் ஜெயலலிதா முன் கைகட்டி நின்ற வரலாற்றை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
ஒரு படம் வெளியாகாததால், தந்தையுடன் சேர்ந்து முதலமைச்சரிடம் ‘நான் உங்களுக்கு எதிரி இல்லை’ என்று கைகட்டி மன்றாடியவர் தான் இன்று துணிச்சல் பேசுகிறார்,” என நேரு கடுமையாக சாடினார்.
இந்த வார்த்தைப் போரால், விஜய் – தி.மு.க. இடையிலான அரசியல் மோதல் மேலும் சூடுபிடித்துள்ளது.
English Summary
Pressure Vijay fiery speech KN Nehru who criticized him one who stood folded hands