3.94 லட்சமாக தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! - மகிழ்ச்சியில் அன்பில் மகேஷ்
3point94 lakh students enrolled in primary schools Happy Anbil Mahesh
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், 'தமிழ்நாடு அரசுத் தொடக்கப்பள்ளிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரித்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது, " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
3point94 lakh students enrolled in primary schools Happy Anbil Mahesh