மகிழ்ச்சியில் மாணவர்கள்..!!!சட்டசபையில் இன்று அன்பில் மகேஷ் அறிவித்த 25 புதிய அறிவிப்புகள் என்னவென்று தெரியுமா...? 
                                    
                                    
                                    25 new announcements made by Anbil Mahesh tn Assembly today
 
                                 
                               
                                
                                      
                                            அமைச்சர் 'அன்பில் மகேஷ்' பொய்யா மொழி, தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாடினார். அப்போது அவர் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அன்பில் மகேஷ்:
அவர் தெரிவித்ததாவது,"அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும்.
இந்த திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேச தலைவர்கள் அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் பிடித்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் ,குழு விவாதம் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் .
பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறங்கள் விழுமியங்கள், பாலின சமத்துவம், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கட்டகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் .
இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் பயிற்சிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8 வது மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் " என அறிவித்தார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                        25 new announcements made by Anbil Mahesh tn Assembly today