ரூ.1,494 கோடி செலவு செய்த பாஜக! மொத்தமாக ரூ.3,352.81 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!
2024 lok sabha election BJP Congress
2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி மட்டும் ரூ.1,494 கோடி செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும்.
மார்ச் 16 முதல் ஜூன் 6 வரை, மக்களவை மற்றும் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் சேர்த்து, அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டுள்ளன.
இதில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் 32-இல் பாஜக அதிக செலவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் பின், காங்கிரஸ் ரூ.620 கோடி செலவிட்டு 18.5% பங்கை பெற்றுள்ளது. மொத்த செலவில், தேசிய கட்சிகள் ரூ.2,204 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளன. தேர்தலுக்காக இக்கட்சிகள் ரூ.6,930 கோடி வசூலித்துள்ளன; இதில் 93% தேசிய கட்சிகளின் வசூலாகும்.
முக்கிய செலவுப் பிரிவுகளில் விளம்பரத்துக்கே அதிகமாக ரூ.2,008 கோடி செலவிடப்பட்டுள்ளது (53%). பயணச் செலவுகள் ரூ.795 கோடியாகவும், வேட்பாளர்களுக்கான நிதி ரூ.402 கோடியாகவும், டிஜிட்டல் பிரச்சாரங்களுக்கு ரூ.132 கோடியாகவும், குற்றப் பின்னணி விளம்பரங்களுக்கு ரூ.28 கோடியாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட 60% நிதி எங்கே இருந்து வந்தது என்பது தெரியாத நிலைபாடு தொடருகிறது. சில கட்சிகள் போட்டியிட்டும், செலவு செய்ததாக பதிவு செய்யாததும் குறிப்பிடத்தக்கது.
English Summary
2024 lok sabha election BJP Congress