17-வது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்: 'வெற்றி தமிழகம்' இலக்குடன் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரை! - Seithipunal
Seithipunal


17-வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய கொள்கை விளக்க உரை, மாநிலத்தின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தொலைநோக்கு வளர்ச்சிப் பாதையையும், அண்டை மாநிலங்களுடனான உரிமைப் போராட்டங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

நீர் உரிமை மற்றும் அண்டை மாநிலச் சிக்கல்கள்

காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைப் பெறுவதில் நீடிக்கும் சிக்கல்களைக் களைந்து, உரிய நேரத்தில் தண்ணீரைப் பெற அரசு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஆளுநர் உறுதியளித்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்குக் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட கேரளா எடுக்கும் முயற்சிகள் முற்றிலும் முறியடிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். உள்நாட்டில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கத் தனித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பொருளாதார இலக்கு மற்றும் தொழில் துறை

பொருளாதாரப் புரட்சி: வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் உன்னத இலக்குடன் இந்த அரசு செயல்படும்.

நகரமயமாதல்: வரும் 2031-க்குள் நகரமயமாதலில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னுதாரண மாநிலமாகத் தமிழகம் உருவெடுக்கும்.

புதிய தொழில் கொள்கை: அயல்நாட்டு முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்க புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும். சிறு, குறு தொழில்கள் (MSMEs) உட்பட அனைத்துத் துறைகளுக்கும் சுலபமாகத் தொழில் தொடங்க 'ஒற்றை சாளர முறை' (Single Window System) கட்டாயமாக்கப்படும்.

சமூக நீதி, பண்பாடு மற்றும் 'வெற்றி தமிழகம்'

தமிழகத்தின் சமூக நீதிக்கான 69 சதவீத இடஒதுக்கீடு எக்காரணம் கொண்டும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஆன்மிகத் துறையைப் பொறுத்தவரை, அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் நவீன டிஜிட்டல் முறையில் துல்லியமாக அளவிடப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இரும்புக்கரம் கொண்டு அகற்றப்படும்.

மேலும், தமிழகத்தின் கீழடி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வு தளங்களுக்கு யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் பெறவும், பாரம்பரிய மற்றும் மருத்துவச் சுற்றுலாவைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

முக்கியத் திட்டம்: மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை நோக்கிய 'வெற்றி தமிழகம்' என்ற புதிய பெருந்த திட்டம் மாநிலத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17th TN Assembly First Session: Governor Vishwanath Arlekar Outlines Vetri Tamizhagam Vision and 1 point 5 Trillion Economic Goal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->