17வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது.. முதல் ஆளாக மோடி செய்த செயல்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 300 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார், இடைக்கால சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரேந்திர குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இன்று17 வது நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் தொடங்கியது. இதில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி முதலாவதாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து மக்களை உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். 

நாளை எம்பிகள் பதவியேற்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிகள் பதவியேற்று முடிந்ததும் மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு வரும் 19ம் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற இரு  அவைகள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 20ஆம் தேதி உரையாற்றுகிறார். மேலும் இக்கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். நடப்பாண்டிற்கான  பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17th lok sabha meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->