10 நாள் அவகாசம் முடிந்தது…! அ.தி.மு.க.வில் அடுத்த கட்டம் குறித்து செங்கோட்டையன் கூடுவது என்ன...? - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்காக முன்னாள் அமைச்சர் 'செங்கோட்டையன்' விதித்த 10 நாள் அவகாசம் இன்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் உரையாற்றியதாவது,"அ.தி.மு.க. மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம்.

தொண்டர்களின் குரலும், மக்களின் எதிர்பார்ப்பும் இதுவே. அந்த உணர்வுகளையே நான் வெளிப்படுத்தினேன். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளது.

அண்ணாவின் பெயரில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை, ஜெயலலிதா இரும்புக் கைப்பிடியால் காத்து வளர்த்தார். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தையை நினைவில் கொள்வோம். எனவே, மறப்போம்… மன்னிப்போம்… ஒன்றிணைவோம்.

இன்று அ.தி.மு.க. ஒற்றுமைக்கான பாதையில் நின்று புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கொடி நாட்ட அனைவரும் துணை நிற்க வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 day deadline over What Sengottaiyans plan regarding next step AIADMK


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->