பயணத்திற்கு முன் தயிரும், சர்க்கரையும் உண்ணுவது எதற்கு?! அறிவியலும், பழமொழியும்.!  - Seithipunal
Seithipunal


பொங்கல் திருநாளின்போது இல்லங்களில் காப்புக் கட்டுவது எதற்காக?

காப்பு நான்கு தாவரங்களைக் கொண்டு கட்டப்படுவது. கூழைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைகளால் கட்டப்பட்டு வீட்டின் கூரைகளில் சொருகப்படும். கூழைப்பூ பாம்புக்கடிக்கு சிறந்த விஷமுறிவு மருந்தாகும். பாம்பு கடித்து விட்டது என்று அறிந்தவுடன் கூழைப்பூவை கசக்கிச் சாறெடுத்து கண்ணில் விட்டால் அது விஷத்தை முறிக்கும். அந்த கூழைப்பூவை பாதுகாக்கத்தான் வேப்பிலையும், மாவிலையும், ஆவாரம்பூவும் ஒன்றாக கட்டப்படுகின்றன. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளவே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இதுவே காப்பு கட்டுவதற்கான காரணம்.

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைத்தார்கள் என்று தெரியுமா?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்பநிலை இருந்தாலும் சரியாக 28.35℃ வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். அதற்காகத்தான்.

பயணத்திற்கு முன் தயிரும், சர்க்கரையும் உண்ணுவது எதற்கு?

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தயிரும், சர்க்கரையும் கொடுப்பது எதற்கென்றால், தயிரில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. கூடவே இயற்கை சர்க்கரையும் சிறிதளவில் உள்ளது. இதனால் வயிற்றுக்கும், செரிமான அமைப்பிற்கும் நல்லதாகும். அதனால் வெளியே செல்லும் முன் இதனை உண்ணச் சொல்கிறார்கள். இதில் குளிர்ச்சி தன்மையும் உள்ளது. அதனால் அழுத்தம் நிறைந்த வேலைகளை செய்ய கிளம்புவதற்கு முன் இதனை உண்ண வைக்கிறார்கள்.

கால்களை ஏன் ஆட்டக்கூடாது என்று கூறினார்கள்?

அக்காலத்தில் வெற்றிலை போடும் பழக்கம் மற்றும் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் இருந்தது. அதில் உள்ள கழிவுகளை அவர்கள் அமரும் மேஜைக்கு கீழ் ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். காலை ஆட்டினால் அந்த கிண்ணம் கீழே விழுந்து அதில் உள்ள கிருமிகள் பரவும் அபாயம் ஏற்படும் என்பதால்தான்.

முருங்கை மரம் ஏன் வீட்டிற்கு முன்பு வைக்கக்கூடாது என்று தெரியுமா?

முருங்கை மரத்தில் கிளைகள் மெல்லியதாகத்தான் இருக்கும். எனவே குழந்தைகள் அதில் ஏறி விளையாடினார்கள் என்றால் கீழே விழுந்து விடுவார்கள் என்பதை தவிர்க்கவும், முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி இருப்பதால் வீட்டிற்கு முன் வைத்தால் வீட்டிற்குள் பூச்சி வந்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும் வீட்டிற்கு முன் முருங்கை மரம் வைக்கக்கூடாது என்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why curd and sugar using while outing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->