தப்பி தவறி கூட இந்த இடங்களில் கடிகாரத்தை மாட்டி விடாதீர்கள்.!! - Seithipunal
Seithipunal


நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது இழந்தால் மீண்டும் பெற முடியாதது என்றால் நேரம்தான். உலகத்தின் அனைத்து அசைவுகளையும் நிர்ணயிப்பது நேரம்தான். அனைவரின் வீட்டிலுமே இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் என்றால் அது கடிகாரம்தான். இப்பொழுது பெரும்பாலானோர் போனில் நேரம் பார்ப்பதைத்தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.

என்னதான் போன், கைக்கடிகாரம் என நேரம் பார்க்க வேறு வாய்ப்புகள் இருந்தாலும் வீட்டில் கடிகாரம் மாட்டுவது என்பது வீட்டின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் வீட்டில் கடிகாரம் மாட்டும் திசை உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கலாம். இந்த பதிவில் உங்கள் வீட்டில் எந்தெந்த திசைகளில் கடிகாரம் மாட்ட வேண்டும், மாட்டக்கூடாது என்று பார்க்கலாம்.

தெற்கு திசை:

வீடாக இருந்தாலும், கடையாக இருந்தாலும் தெற்கு திசை பார்த்ததாக இருக்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் வாஸ்துவின் படி தெற்கு திசை எதிர்மறை ஆற்றல்கள் அதிகமிருக்கும் திசையாகும். எனவே கட்டிடத்தின் தெற்கு திசை சுவரில் ஒருபோதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.

மாட்ட வேண்டிய திசை:

எப்படி கடிகாரத்தை தெற்கு திசையில் மாடகூடாதோ அதேபோல அதனை தவிர்த்து கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய மூன்று திசைகளிலுமே கடிகாரத்தை மாட்டலாம். இதனால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

பெண்டுல கடிகாரம்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி பெண்டுலம் இருக்கும் கடிகாரம் வீட்டில் மாட்டுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

வாசற்கதவு:

வாசலின் மேல் எப்பொழுதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. அதேசமயம் வாசற்கதவை பார்க்கும் படியும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதனால் உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேரமாய் ஆற்றல்கள் திரும்பி செல்ல வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கை:

உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவவும் கடிகாரத்தை படுக்கையறையிலிருந்து தூரமாக மாட்டி வைக்கவும். இது தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

ஓடாத கடிகாரம்:

ஒருவேளை உங்கள் வீட்டு கடிகாரம் ஓடாமல் இருந்தாலோ அல்லது கடிகாரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ உடனடியாக அதனை அங்கிருந்து எடுத்துவிட வேண்டும். கடிகாரத்தை சரிசெய்த பிறகே மீண்டும் அதனை மாட்ட வேண்டும். ஓடாத கடிகாரத்தை வீட்டில் கெட்ட சகுனமாகும்.

படுக்கையறை:

படுக்கையறை என்று வரும்போது அங்கு கடிகாரத்தை கிழக்கு திசையில் மாட்டுவது நல்லது. அதேசமயம் கிழக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை எனில் வடக்கு திசையில் மாட்டலாம். இது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

where we fix the wall clock at house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->