ஒரு சிரிப்பிற்குள் இதனை விதமா?! அப்பப்பா.!! வாட்ஸாப்பில் வைரலாகும் சிரிப்பின் மொழி!!  - Seithipunal
Seithipunal


தற்பொழுது இணையதள உலகில் பல்வேறு விதமான ஜோக்குகளை நாம் பார்க்க முடியும் அவற்றில் நகைச்சுவை துளிகள் நம்மை சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும். கீழே உள்ள உரையாடல் உங்களை சிரிக்க வைத்தால் நீங்கள் ஞானி., சிந்திக்க வைத்தால் நீங்கள் விஞ்ஞானி!!

சிரிக்கும் சிரிப்புகள் பலவிதம்., ஒவ்வொன்றும் ஒருவிதம்: 

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை...!" 

துன்பத்தை எதிர்கொள்ள ஒரே வழி சிரிப்பு தான். எனவே, சிரிப்போம்., கவலைகளை மறப்போம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whatsap viral story, meaning of laughing


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->