பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நடக்கும்?  - Seithipunal
Seithipunal


புதுப்பாணையில் புத்தரிசி இட்டு வெல்லம், பால் சேர்த்து செய்யும் பொங்கலின் ருசியை தனியாக இருக்கும. அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் ஊரெல்லாம் பொங்கல் மணக்கும். 

* தமிழகம் முழுவதும் இன்று தைத்திருநாள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பானையில் வைக்கப்படும் பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நமக்கு நன்மை, தீமை உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

* பொங்கல் கிழக்கு திசையில் பொங்கினால் வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். ஏதேனும் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தால் அதனை வாங்கி மகிழ்கிறீர்கள். உடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும். 

* பொங்கல் மேற்கு திசையில் பொங்கி வழிந்தால் சுப நிகழ்வுகள் உண்டாகும். மகன், மகளுக்கு வரம் தேடுபவராக இருந்தால் இந்த ஆண்டு கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கும். 

* பொங்கல் வடக்கு திசையில் போக்கினால் பணவரவு அதிகமாகும். பதவி உயர்வு தேடி வரும். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்களுக்கு வாய்ப்பு அதிகம். கொடுத்துள்ள கடன் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் கைக்கு வரும். 

* தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால் பிணி என்றே சொல்லலாம். அதாவது வருடம் முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வு போன்றவை அதிகமாக இருக்கும். சுபகாரியங்கள் சற்று தாமதமாகும். இதனால் உடல் நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what direction pongal benefit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->