வாட்ஸ்அப் பிரியர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்...! இனி ஸ்டேடஸ் போடுறது இன்னும் ஜாலி...! - களமிறங்கும் புதிய ஃபீச்சர்...! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப், அன்றாட தகவல் பரிமாற்றத்தின் இன்றியமையாத செயலியாக உருவெடுத்துள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் முதல் அலுவலக பணிகள், கல்வி, தொழில் மற்றும் வணிகத் தகவல் பரிமாற்றம் வரை அனைத்திற்கும் முக்கிய தொடர்பு தளமாக வாட்ஸ் அப் பயன்பட்டு வருகிறது.

நண்பர்களுடன் உரையாடுவது, குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்வது, புகைப்படங்கள், காணொளிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணியிட கோப்புகளை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப்பை நம்பியிருக்கின்றனர்.

அலுவலக குழுக்கள், பள்ளி மற்றும் கல்லூரி குழுக்கள், வாடிக்கையாளர் தொடர்புகள், தொழில் ரீதியான கலந்துரையாடல்கள் என பல்வேறு பயன்பாடுகளால் இந்த செயலி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி வருவதாக மதிப்பிடப்படுகிறது.

பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், போட்டி நிறைந்த டிஜிட்டல் உலகில் தனது முன்னிலை நிலையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதிய வசதிகளையும் மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வரிசையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தொடர்பாக பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதன்படி, ஸ்டேட்டஸ் பதிவிட்ட பிறகும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கேப்ஷனை 15 நிமிடங்களுக்குள் திருத்தும் வசதி வழங்கப்பட உள்ளது.தற்போது இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கேப்ஷனில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள் அல்லது தகவல் தவறுகளை சரிசெய்ய, முழு ஸ்டேட்டஸையும் நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது.பயனர்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் இந்த புதிய அம்சம், சோதனை கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், உலகம் முழுவதும் உள்ள அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Very happy news WhatsApp lovers Now posting status even more fun New feature coming soon


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->