சுவையான சத்தான உளுந்து லட்டு.. குட்டீசுக்கு பிடித்த சூப்பர் ரெசிபி.! - Seithipunal
Seithipunal


உளுந்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான கோளாறுகளை தவிர்க்க உதவுகிறது. இதில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த உளுந்தில் சுவையான லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கக்கூடும். 

சுவையான சத்தான உளுந்து லட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

அரிசி - 2 கரண்டி

உளுந்து - 1 கப்

ஏலக்காய் தூள் - 1 கரண்டி

முந்திரி பருப்பு - 1/4 கப்

நெய் - 2கரண்டி

வெல்லம் - 3 கரண்டி

செய்முறை

நெய்யை சிறிதளவு பாத்திரத்தில் ஊற்றி அதில் முந்திரி பருப்பை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

பின் வேறொரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் அப்படியே வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆற வைத்த அரிசி உளுந்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு அதில் ஏலக்காய் தூள் வெல்லம் சேர்த்து மீண்டும் அழைக்கவும்.

மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆரம்பித்து அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

நன்றாக பிசைந்தவுடன் கையில் நெய் தடவிக் கொண்டு இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான சத்தான உளுந்து லட்டு ரெடி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ulunthu laddu for kids


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->