உடல் எடையை குறைக்க சத்தான இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


உடலின் மெட்டபாலி சக்தி அதிகரிக்கவும்  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஏ பி சி ஜூஸ் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 ஆப்பிள்  - 1
 கேரட்        - 1 
 பீட்ரூட்       -1 
 தண்ணீர்  - 1  கப் 

 செய்முறை: 

மிக்ஸர் ஜார் எடுத்து அதில் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி  போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்  அரைத்து அவை  ஜூஸ் பதத்தில் வந்ததும் கிளாசில் ஊற்றி பரிமாறவும். உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய  ஜூஸ் ரெடி. 

இந்த ஜூஸினை தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதோடு, செரிமானம் போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குகிறது.   கேரட் மற்றும் பீட்ரூட்டில் அதிகளவிலான இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. 

இந்த ஜூஸ் உடலின் மெட்டபாலிசத்தை  அதிகரிப்பதன் காரணமாக  உடல் எடை மற்றும் செரிமானத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try this abc juice for weight loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->