உலகில் முதலாவதாக ஆங்கிலப் புத்தாண்டு 2026- ஐ கொண்டாடிய கிரிபாட்டி தீவு மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஆங்கில புத்தாண்டு 2026-ஐ வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில், சூரியன் முதலில் உதயமாகும் பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு 2026 இன்று முதலில் பிறந்துள்ளது. 

இந்த தீவில் உள்ள கிறிஸ்துமஸ் நகரில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள மக்களும் அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

அன்னத்தின் நாட்டின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததும், நகரின் மையப்பகுதியில் வண்ண வாண வேடிக்கைகள் கண்கொள்ளா காட்சியாக இருந்ததோடு, நகர வீதிகளில் மக்கள் உற்சாகமாக ஆடி பாடி, இனிப்புகள் கொடுத்து ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The people of Kiribati and New Zealand were the first in the world to celebrate the English New Year 2026


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->