சுட்டெரிக்கும் வெயிலில்.. இதையெல்லாம் தவிர்த்தல் நல்லது..!! - Seithipunal
Seithipunal


வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை :

தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் துணி ஆடைகளை அணிதல் வேண்டும்.

வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையிலும் பராமரித்து கொள்ள வேண்டும்.

மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்து கொள்ளலாம்.

வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து கொள்ள வேண்டும்.

இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சைச்சாறு, மோர், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவைகளை பருகலாம்.

வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர், தீவனம் அளிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை :

 நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அதிக புரதம்ஃமாமிச கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

👫 வயதானவர்கள்ஃகுழந்தைகள்ஃநீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் கதவுகள் பூட்டப்பட்ட வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம். தேவைப்பட்டால் சாக்குப் பைகளை நனைத்து விலங்கினங்களின் மீது போர்த்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer tips 05


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal