ரோஸ் மில்க் செய்வது எப்படி..! இன்றே செய்து பாருங்கள்..!
rose milk recipe tamil
கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக வெளியே சென்று வரும் நபர்களும் வெயிலில் பணியாற்றும் நபர்களும் பல்வேறு விதமான வெயில் நோய்களுக்கு ஆளாகி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். அந்த வகையில் ரோஸ்மில்க் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
ரோஸ் மில்க் செய்யத்தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 2 கிண்ணம்
தண்ணீர் - 1 & 1/2 கிண்ணம்
பிங்க் புட் கலர் - 3/4 தே.கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 3/4 தே.கரண்டி முதல் 1 தே.கரண்டி
பால் - ரோஸ் மில்க் தயாரிக்க தேவையான அளவு

ரோஸ் மில்க் செய்முறை:
முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சுமார் நான்கு நிமிடங்கள் கழித்த பின்னர் தீயை குறைத்துவிட்டு, பிங்க் புட் கலரை சேர்க்கவும்.
இரண்டும் நன்றாக சேரும் படி கலந்த பின்னர் தீயை அனைத்து விட்டு, ரோஸ் எசன்ஸை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். பின்னர் இதனை பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து பின்னர் குளிர்ச்சி அதிகமானதும் எடுத்து பருக வேண்டும்.
Tamil online news Today News in Tamil