வெயிலுக்கு இதமான ''பானகம்'' இப்படி செய்து குடித்துப் பாருங்க.!
Panakam recipe in tamil
வெயிலுக்கு இதமான பானகம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புளி
வெல்லம்
சுக்குப்பொடி
ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் வெல்லத்தை நன்றாக பொடியாக்கி கொள்ளவும். புளியை சுடுதண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய புளி தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஏலக்காய் தூள், சுக்கு பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அவ்வளவுதான் வெயிலுக்கு இதமான புத்துணர்ச்சியை கொடுக்கும் பானகம் தயார்.