தமிழகத்தில் எழில் கொஞ்சும் கடற்கரை... அலைகள் ஓயாமல் பாடும் பாட்டு.! அனைவரும் சென்று பார்க்கவேண்டிய இடம்.!! - Seithipunal
Seithipunal


எழில் கொஞ்சும் கடற்கரை :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி சீர்காழியிலிருந்து 31கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

தரங்கம்பாடியின் கவி பாடும், எழில் கொஞ்சும் கடற்கரை உங்கள் துன்பங்களை துடைத்து இன்பங்களை வீசும் சக்தி பெற்ற இடமாகும். 

சிறப்புகள் :

இந்த கோட்டை டேனிஷ் கட்டிடக்கலை அம்சங்களைக் காண்பிப்பதாகும். இந்த கோட்டை தற்போது தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 

நடனமாடும் அலைகள் ஒருபுறம் மற்றும் சூரியன் மறுபுறம் என இரண்டு பக்கங்களிலுமே இக்கடற்கரை நீண்டிருக்கிறது. அமைதியான மற்றும் அழகான சூழலில் அமைந்துள்ள இக்கடற்கரை சோர்ந்த மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும். இந்த கடற்கரை எப்பொழுதும் நினைவில் நிற்கும் இடமாக அழகுடன் உள்ளது. 

மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான பல சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு இதுதான் சிறந்த செயலி.

இந்த கடற்கரையில் தேவாலயங்களும் உள்ளன. நாகப்பட்டினம் இந்தியாவின் மிக வளர்ந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாகும். 

வரலாற்று சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். அதன் அருகிலேயே தேவாலயங்கள், ரெஸ்ட்டாரண்ட், கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.

எப்படி செல்வது?

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

விமானம் வழியாக :

நாகப்பட்டினம் விமான நிலையம்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையம்.

ரயில் வழியாக :

காரைக்கால் ரயில் நிலையம்.
தரங்கம்பாடி ரயில் நிலையம்.
நாகப்பட்டினம் ரயில் நிலையம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nagapattinam beach


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->