பல்வேறு வகையான பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்.!
kanavu palan 4
பறவைகள்: பொதுவாகப் பறவைகள் பறப்பதைப் போலக் கனவு கண்டால் செல்வம் கிடைக்கும். பறவைகளின் முட்டைகளைக் கண்டால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் மேன்மை உண்டு. பறவைகள் கொத்துவது போலக் கனவு கண்டால் பொதுவாக நல்லதல்ல. பறவைக் கூட்டைக் கனவில் கண்டால் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
பறவைத் தனது குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவதைப் போலக் கனவு கண்டால் பிள்ளை பிறக்கும். பறவைகள் இறப்பதைப் போலக் கனவு கண்டால் நல்லதல்ல. பறவைகள் சண்டை போடுவது போலக் கனவு கண்டால் கலகம் பிறக்கும். கழுகு, காக்கா போன்ற பறவைகள் வேட்டை ஆடுவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல. பறவைக் கூட்டை கலைப்பது போலக் கனவு கண்டாலும் நன்மை அல்ல.
அன்னப் பறவை : அன்னப் பறவையை கனவில் கண்டால் சரஸ்வதி கடாக்ஷம் உண்டு.
கிளிகள்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளிகளைக் கனவில் கண்டால் தொழில் விருத்தி அடையும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும். கிளிகளுடன் பேசுவது போலக் கனவு கண்டால் சிறப்பான பல நல்ல பலன்களைப் பெறலாம்.
கிளிகளைக் கூண்டில் அடைப்பது போலக் கனவு கண்டால் நல்லதல்ல.
அதே போல நீங்கள் கிளியை கூண்டில் கண்டாலும் நல்லதல்ல. அதே போல நீங்கள் கிளியை கூண்டில் கண்டாலும் நல்லதல்ல.
கிளிகள் தானியங்களைத் தின்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல பொருள் சேதம் உண்டாகும்.
கிளி இறப்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல கடன்கள் வந்து சேரும்.
காக்கை: காக்கையை எந்தவகையில் கனவில் கண்டாலும் நல்லதல்ல. அதே போல காக்கை கூட்டத்தை கனவில் கண்டாலும் நல்லதல்ல. காக்கை கரைவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல. ஆனால் அதே சமயத்தில் காக்கை தனது தலையை தண்ணீரில் முக்கி எடுப்பது போல அல்லது காக்கை குளிப்பது போலக் கனவு கண்டால் சனி தோஷம் நீங்கும்.
காக்கையை அதன் குஞ்சுகளுடன் பார்த்தால் பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம். அண்டம் காக்கையை கனவில் கண்டால் நெருங்கிய நண்பர் இறந்து விடுவார் என்று சாஸ்த்திரங்கள் கூறுகிறது. மொத்தத்தில் காக்கையை கனவில் காண்பது அவ்வளவாக நல்லது அல்ல.