எயிட்ஸ்சை விட கொடூரமான ஒன்று இந்தியாவில்... ஆண்டுக்கு 25 லட்சம் உயிர்களுக்கு இலக்கு..? கலங்கடிக்கும் ஆய்வறிக்கை..!! - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும்.

சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.

தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா தற்போது இடம்பெற்றுள்ளது.

பிரபல ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 90 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது.

இது எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா மூன்றின் காரணமாக உயிரிழப்போரை விட மூன்று மடங்கு அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக 18.1 லட்சம் பேரும், நீர் மாசுபாடு காரணமாக 6.4 லட்சம் பேரும் என 25 லட்சம் பேர் 2015ல் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்த நிலையில் 18 லட்சம் பேர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இறக்கும் நாடாக சீனா உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pollution caused nine million deaths globally in 2015 – three times more than AIDS, tuberculosis and malaria combined.


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->