இந்த பாயசம் சாப்பிட்டு இருக்கிறீர்களா?! கவர்ந்திழுக்கும் வித்தியாசமான சுவை!!
how to preapre sakkaravalli kizhangu payasam
தற்போதைய சீசனில் கிடைக்கும் சத்தான சுவைமிகு உணவு சர்க்கரை வள்ளி கிழங்காகும். இது உடலிற்கு வலுசேர்க்கும். அத்துடன் சுவையான உணவுப்பொருளாகும். இதை வைத்து பாயசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
ஜவ்வரிசி - 3 டேபிள்,
ஸ்பூன் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - 1டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் ஜவ்வரிசியை எடுத்துக்கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பின் ஒரு குக்கரை எடுத்து, அதில் கிழங்கை இரண்டாக வெட்டி வைத்து தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும். வெந்த பின்னர் தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
ஒருகடாயில் சிறிது பாலை இட்டு நன்றாக கொதித்த பின்னர், அத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி பின் அத்துடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து ஒரு மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி!!
English Summary
how to preapre sakkaravalli kizhangu payasam