சுவையான பிடி கருணை குழம்பு செய்வது எப்படி தெரியுமா...?
how to make delicious Pidi Karunai soup
பிடிகருணை குழம்பு...செம்ம டேஸ்ட்ல இருக்கும்.ஒரு தடவ செஞ்சு பாருங்க அசந்து போவீங்க ...
தேவையான பொருட்கள்:
பிடிகருணை 200 கிராம்
சின்ன வெங்காயம் 8
பூண்டு 10 பல்
தக்காளி 2
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
வடகம், வெல்லம் சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை :
முதலில், பிடிகருணையை மண் போக கழுவி, வேக வைத்து, தோல் நீக்கி, வட்டம் வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி துண்டுகளாக்கிய பிடிகருணையை சேர்த்து மேலும் வதக்கவும்.
அதன் பிறகு, புளிக்கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பிடிகருணை குழம்பு தயார் . கடைசியாக சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
English Summary
how to make delicious Pidi Karunai soup