'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் அழிக்கப்பட்ட கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்பும் பாகிஸ்தான்: பயங்கரவாதி மசூத் அசாருக்கு கோடிகளில் இழப்பீடு..?
Pakistan government decides to pay Rs 14 crore compensation to terrorist Masood Azhar
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினர் கடந்த 07-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதன் போது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய துல்லியமான வான் வழி தாக்குதலில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.

அதில், அங்கு தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மசூத் அசாரின் மூத்த சகோதரி, 05 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பியுள்ளான்.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கக்கூடும். மேலும், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டி தரப்படும் என்றும் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ துல்லியமான தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. 80-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் மட்டுமே இறந்தனர். அதில் அப்பாவி மக்கள் யாரும் சாகவில்லை.
ஆனால், பயங்கரவாதிகளை பொதுமக்கள் என்று கூறி பாகிஸ்தான் கட்டுமான பணிகளை செய்து தருவதாக கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட 09 பயங்கரவாதிகளின் முகாம்களை மீண்டும் கட்டி எழுப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இது மீண்டும் நம் நாட்டுக்கு பிரச்னையாக மாறலாம். புதிதாக கட்டப்படும் வீடுகளால் அங்கு பயங்கரவாதிகள் அதனை முகாம்களாக பயன்படுத்தலாம். இந்த காரணமாக பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளது.
English Summary
Pakistan government decides to pay Rs 14 crore compensation to terrorist Masood Azhar