முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான ED வழக்கை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி மீது 2011 அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது 2020-இல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்து செய்யப்பட்டதால் ED வழக்கையும் ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சேட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜாபர் சேட் மனுவை ஏற்று அமலாக்கல் துறை  வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம், பின்னர் மறுவிசாரணை நடத்துவதாக அறிவித்தது. இந்த உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், ஜாபர் சேட் மேல்முறையீட்டை ஏற்று , அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் அபய் -எஸ்.ஒகா, உஜ்வால் புயான் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Supreme Court has quashed the ED case against former DGP Jaffer Sait


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->