எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.? - Seithipunal
Seithipunal


பழங்களில் சில பழங்களை தோலுடன் சாப்பிட வேண்டும் அப்போதுதான் அந்த பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதேபோல் சில பழங்களின் தோலை சாப்பிடக்கூடாது.

அந்த வகையில் எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மாம்பழம், சப்போட்டா, திராட்சை, கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை தோலுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

அதேபோல் பழங்களை விழுந்து ஜூஸாக குடிக்கும்போது அதில் உள்ள நார் சத்து கிடைக்காது என்றும் அதனால் பழங்களை ஜூஸ் போட்டு குடிக்காமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

பழங்களில் உள்ள சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கிறது. எனவே நாம் பழமாக தோலுடன் சாப்பிட்டால் அதன் முழு சத்துக்களும் கிடைக்கும்.

கொய்யா பழத்தை தோலுடன் சாப்பிடுவதால் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கிறது. அதேபோல் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் குணம் உள்ளது.

வாழைப்பழ தோளில் கால்சியம் மற்றும் அமிலம் ஆகியவை இருக்கிறது ஆனால் யாரும் வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிடுவதில்லை. குறிப்பாக வாழைப்பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fruits eat with skin benefits


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->