கை, கால்களில் அடிக்கடி நெட்டி எடுக்கலாமா.? அவ்வாறு எடுத்தால் இவ்வளவு பாதிப்பா.?
disadvantages of Netti eduthal
பொதுவாக மனிதர்கள் கை, கால் விரல்களில் நெட்டி எடுக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அவ்வாறு தொடர்ந்து நெட்டி எடுப்பது விரல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நெட்டி என்பது விரல்களில் உள்ள இரண்டு எலும்புகளின் இணைப்புகள் உராயும் போது ஏற்படும் சத்தம் தான் நெட்டி என்கிறோம்.
இதில் நெட்டி எடுக்கும்போது எலும்புகளுக்கு இடையில் சினோவியல் என்ற மூட்டுறை திரவம் சுரக்கிறது. இந்தத் திரவம் விரல்களின் எலும்புகளின் இணைப்புகளில் படியும் முன்னர் இணைப்பில் வாயுவை வெளியேற்றுகிறது.
அந்த வகையில் கை, கால் விரல்களில் அடிக்கடி நெட்டி எடுத்தால் விரல் இணைப்புகளை சுற்றியுள்ள சதைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நெட்டி எடுப்பதால் நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.
மேலும் கைவிரல்களில் அடிக்கடி நெட்டி எடுப்பதால் கையில் வலிமை பாதிக்கப்படுகிறது. அதேபோல் தன்னிச்சையாக அடிக்கடி நெட்டி எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது ஆனால் எப்போதாவது நெட்டி எடுப்பது இயல்பான விஷயம் என கூறப்படுகிறது.
English Summary
disadvantages of Netti eduthal