சுவையான சக்கரைவள்ளிக்கிழங்கு பான்கேக் குழந்தைகளுக்கு செஞ்சுகுடுங்க ...விரும்பி சாப்பிடுவாங்க....!
Delicious sweet potato pancakes for kids they will love to eat them
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக். உடலுக்கு ஊட்டச்சத்துமிகுந்த ஒன்று சக்கரை வள்ளிக்கிழங்கு. இதனை பான்கேக் மூலம் கலந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
மைதா 3 கப்
முட்டையின் வெள்ளை கரு 3
வேக வைத்தக் கிழங்கு 3
வெனிலா எசென்ஸ் 2 டீஸ்பூன்
பால் 2 கப்
எண்ணெய் தேவைக்கு ஏற்ப

செய்முறை :
முதலில் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, முட்டைக்கரு, வெனிலா எசென்ஸ், சர்க்கரை மற்றும் அரைத்த கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இதில் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.அதன் பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசை போல் சுட்டு எடுக்கவும். டேஸ்டான சர்க்கரை வள்ளிக் கிழங்கு பேன் கேக் ரெடி.
English Summary
Delicious sweet potato pancakes for kids they will love to eat them