வாழைமரம் வீட்டில் வளர்க்கலாமா? எந்த திசையில் வைக்க வேண்டும்?!
can we put banana tree in home
வீட்டில் வாழைமரம் வளர்க்கலாமா?
வாழைமரம் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. அது சந்ததியை வாழையடி வாழை போல தழைக்க செய்யும் என்பார்கள்.
இளம் வாழைக்கன்றுகளை வீட்டின் கதவு மற்றும் பந்தல்களில் விழாக்களின்போதும், பண்டிகைகளின்போதும் அலங்காரப் பொருளாக பயன்படுத்தலாம். இது செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக போற்றப்படுகிறது.
வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது.
மனித உடலின் உடனடி ஆற்றலுக்கு வாழைப்பழம் மிகவும் பலன் தருகிறது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
வாழைக்காயை தென்னிந்திய சமையலில் விரும்பி சேர்த்துக் கொள்வார்கள். இதனை வைத்து சூடான பஜ்ஜி என்னும் சிற்றுண்டியும் தயார் செய்யப்படும்.
வாழைப்பழத் தோல், சாயமிடலுக்கு பயன்படுகிறது.
வாழை மரத்தின் வேர், தண்டு, பூ மற்றும் இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் சாறு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக உள்ளது.
ஆகவே இந்த மரத்தை உங்கள் தோட்டத்தில் நிச்சயம் வளர்க்க வேண்டும்.
யார் வாழை மரத்தை வெட்டக்கூடாது?
சிறியவர்கள் மற்றும் திருமண வயதில் இருப்பவர்கள் வாழை மரத்தை வெட்டக்கூடாது.
ஒற்றை வாழை மரத்தை வைத்திருக்கக்கூடாது. குறைந்தபட்சம் அதன் துணையாக சிறு குருத்தாவது அருகில் நட வேண்டும் அல்லது அதிலேயே குருத்து முளைத்து வருவதும் நல்லது தான்.
துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது. அதனால் அதை வெட்டவும் கூடாது.
கிரகப்பிரவேசத்திற்கு வாழைமரம் கட்டுதல் அவசியமா?
கிரகப்பிரவேசத்திற்கு வாழைமரம் கட்டுதல் அவசியம். புது வீட்டில் வாழையடி வாழையாக அதாவது தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என்பதற்காக வாழைமரம் கட்டப்படுகிறது.
வீட்டில் எங்கெல்லாம் வாழைமரத்தை வைக்கலாம்?
குளிக்கும்போது வெளியாகும் நீர் செல்லும் வழியில் வீட்டில் வாழை மரத்தை வைக்க வேண்டும்.
வீட்டின் எதிரில் வாழைமரம் வளர்ப்பதை காட்டிலும் வீட்டின் பின்புறத்தில் வாழை மரத்தை வைப்பது சிறப்பு.
வீட்டின் முன்புறம் வாழைமரம் இருக்கலாம். ஆனால் வீட்டின் முன்புறத்தில் நுழையும் சூரியக் கதிர்களை தடுக்கா வண்ணம் இருக்குமாறு வளர்ப்பது நன்று.
எந்த திசையில் வைக்க வேண்டும்?
வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் வாழை மரத்தை வைக்கலாம்.
வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் வாழை மரத்தை வைக்கக்கூடாது.
இந்த மரம் செழிப்பு மற்றும் செல்வத்தின் சின்னமாகும். இலைகள் பல்வேறு சமய நிகழ்வுகளுக்கும், பண்டிகைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்காக வாழை மரத்தை வீட்டில் வைக்கலாம்.
வாழையடி வாழையாக நம் குலம், வம்சம், தலைமுறை தழைத்தோங்க வேண்டும் என்று...
வீட்டிற்கு ஒரு வாழை வளர்ப்போம்... பசுமைப்புரட்சி செய்வோம்.!
English Summary
can we put banana tree in home