பியூட்டி பார்லருக்கு 'டாட்டா' சொல்லுங்க...! காபித்தூள், உருளைக்கிழங்கு இருந்தா போதும்...! - வீட்டில் ஜொலிக்கும் 'மேஜிக்' அழகு...! - Seithipunal
Seithipunal


நம் அன்றாட சமையலறையில் இருக்கும் இயற்கை உணவுப் பொருட்களையே பயன்படுத்தி முக அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ரசாயனப் பொருட்கள் இன்றி சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் சில எளிய இயற்கை அழகு குறிப்புகள் இதோ...
காய்ச்சாத பசும்பாலை தினமும் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், முகம் மென்மையுடனும் மிளிரும் பொலிவுடனும் காட்சியளிக்கும்.

காபித்தூள், தக்காளி மற்றும் அரிசி மாவை ஒன்றாக கலந்து தயாரிக்கும் இயற்கை ஸ்கிரப்பை முகத்தில் பயன்படுத்தினால், இறந்த செல்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவைப் பெறும்.வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுச் சாறை தினமும் பருகி வந்தால், முகத்தில் இயற்கையான ஜொலிப்பு அதிகரிக்கும்.தக்காளிச் சாறு, தயிர் மற்றும் ஓட்ஸ் சேர்த்து விழுதாக தயாரித்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் சிறிய கொப்புளங்கள் படிப்படியாக குறையும்.

வெள்ளைச் சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரையை சிறிது தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் அகன்று இளமையான தோற்றம் கிடைக்கும்.மசித்த பப்பாளி மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வைத்திருந்து மெதுவாக தேய்த்து கழுவினால், சருமம் பட்டு போன்ற மென்மையை பெறும்.

தேனை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், வறண்ட சருமம் ஈரப்பதம் பெற்று புத்துணர்ச்சி அடையும்.எலுமிச்சைத் தோலை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும நிறம் மேம்பட்டு மென்மை அதிகரிக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை மசித்த பப்பாளியை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், முகம் இயற்கை பொலிவுடன் பிரகாசிக்கும்.தயிர், தேன் மற்றும் சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து விழுதாக தயாரித்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவினால், முகம் பளிச்சென மின்னும்.

தோல் நீக்காத உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் முட்டை மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து துடைத்தால், முகம் புத்துணர்ச்சியுடனும் பிரகாசத்துடனும் தோன்றும்.தர்பூசணியை அரைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், சருமம் குளிர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் காணப்படும்.

இவ்வாறு தங்களின் சருமத்திற்கு ஏற்ற இயற்கை குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், முகத்தை நீண்ட நாட்கள் இளமையுடனும் அழகிய பொலிவுடனும் பராமரிக்க முடியும். இதனுடன் சத்தான மற்றும் சமநிலையான உணவுமுறையை கடைப்பிடிப்பதும் உடல் ஆரோக்கியத்தையும் முக அழகையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Call beauty parlor Tata Just coffee grounds and potatoes enough Magic beauty that shines at home


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->