உங்க கணவருக்கு பர்மா நூடுல்ஸ் இந்த ஸ்டைல்ல பண்ணி குடுங்க... அசந்து போவாரு....! - Seithipunal
Seithipunal


பர்மா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :
பொருள்                                - அளவு
நூடுல்ஸ்                                  2 பாக்கெட்
வெங்காயம்                         2 கப் (நறுக்கியது)
பூண்டு                                 ஐந்து பல் (நறுக்கியது)
சிவப்பு மிளகாய்                  6
எண்ணெய்                         தேவையான அளவு 
பொட்டுகடலை மாவு        3 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி இலை          1 கப் (நறுக்கியது) 
உப்பு                                    தேவையான அளவு


செய்முறை :
பர்மா நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் நூடுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டி தண்ணீரில் அலசி மீண்டும் வடிகட்டி சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மிளகாயை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு அகலமான பேஸனில் நூடுல்சை போட்டு, அதில் பொரித்த பூண்டு, வெங்காயம், காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி, உப்பு, பொட்டுகடலை மாவு ஆகியவற்றை போட்டு கலக்கி, எண்ணெயில் ஊற்றி கரண்டியால் கலக்கவும். பிறகு பறிமாறும் போது தட்டில் நூடுல்ஸ் கலவையை வைத்து, அதன் மேல் பச்சை வெங்காயம், பச்சை கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

burma noodles cooking


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->