வெங்காயத்தில் கருப்பு திட்டு — அதை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? சாப்பிடலாமா? மருத்துவர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


நாம் தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயங்களில் சில நேரங்களில் கருப்பு கலரில் சிறு திட்டு போன்ற புள்ளிகள் காணப்படுகின்றன. பலருக்கும் இதற்கான காரணம் தெரியாது, இதுபோன்ற வெங்காயத்தைச் சாப்பிடலாமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கியமான விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சில வெங்காயங்களில் வெளிப்புறமாகவோ, சில சமயங்களில் உள்ளேயோ கூட கருப்பு நிற திட்டு போன்ற புள்ளிகள் இருக்கும். இதுபோல கருப்பு நிறம் தோன்றுவதற்கு காரணம் என்னவென்றால், வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் வளரக்கூடிய அஸ்பெர்கிலஸ் நைஜர் (Aspergillus niger) என்ற ஒரு வகைப் பூஞ்சைதான்.

ஊட்டச்சத்து நிபுணர் பாரதி குமார் கூறுகையில், “இந்த பூஞ்சை வெங்காயத்தின் வெளிப்புற அடுக்குகளில் வளர்ந்து, கரிய தூள் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இது மிகுந்த அளவில் பரவாவிட்டால் உடனடி ஆபத்து ஏற்படாது. ஆனால் இதுபோன்ற வெங்காயத்தை தொடர்ந்து அதிகளவில் சாப்பிட்டால், ‘ஆக்ராடாக்சின் ஏ (Ochratoxin A)’ என்ற நச்சு உற்பத்தி செய்யப்படும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், “சமைத்தாலும் இந்த நச்சு முழுமையாக அழியாது. எனவே, சமைப்பதன் மூலம் அதை நீக்க முடியாது. வெங்காயத்தை குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது முக்கியம். சமையலுக்கு முன் ஒவ்வொரு வெங்காயத்தையும் நன்கு பரிசோதிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, வெங்காயத்தின் வெளிப்புறம் மட்டும் கருப்பு கலரில் இருந்தால், அந்தப் பகுதியை வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதியைச் சமைக்கலாம். ஆனால், கருப்பு திட்டு உள்ளேயும் பரவியிருந்தால் அல்லது வெங்காயம் மென்மையாகவும் அழுகிய நிலையிலும் இருந்தால், அதை உடனே தூக்கி எறிவதே நல்லது.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு, கல்லீரல், நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இத்தகைய பாதிக்கப்பட்ட வெங்காயம் அல்லது பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெங்காயத்தில் சிறிய அளவில் கருப்பு நிறம் இருந்தால் அதைக் கவனமாக நீக்கி பயன்படுத்தலாம். ஆனால் உட்புற அடுக்குகள் வரை கருப்பு கலர் பரவியிருந்தால், அது உடல்நலத்துக்கு ஆபத்தானது.
இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே; மருத்துவ ஆலோசனை அல்ல. உடல் நல பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Black spot on onion is it safe to use Can you eat it Doctor warns


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->