காலில் வெள்ளி கொலுசு அணிவது எதற்காக?
benefits of wear silvar golusu
ஆண்டு முதல் தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.
மேலும், பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறோம் என்பது குறித்து பார்ப்போம்.

காலில் தங்கம் அணிவது என்பது உடல் சூட்டை அதிகப்படுத்தும். வெள்ளி கொலுசு காலில் அணிந்தால், உடல் சூட்டை கட்டுப்படுத்தி உடல் குளிர்ச்சியடைய உதவி செய்யும். இதனால், தான் காலில் வெள்ளி கொலுசு அணிந்து வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல், வெள்ளி கொலுசு அணிவதால் மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. கர்ப்ப காலத்தில் வெள்ளி கொலுசு அணிந்திருந்தால் அது தாய்க்கும், சேய்க்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
English Summary
benefits of wear silvar golusu