வெற்றிலை போடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.? - Seithipunal
Seithipunal


அந்த காலத்தில் இருந்தே வெற்றிலை பாக்கு போடுவது பழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது வெற்றிலை.

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் வெற்றிலையின் பயன்கள் குறித்து எந்த பதிவில் நாம் காணலாம். வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2 ஆகிய பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்த வகையில் பல நிகழ்ச்சிகளில் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடுவதை பார்த்திருப்போம் சாதாரண நாட்களை விட இது போன்ற விசேஷ நாட்களில் மக்கள் பலவகை உணவுகளை அதிக அளவு சாப்பிடுகின்றனர். அதனால் ஏற்படும் செரிமான கோளாறுகளை சீராக்குவதற்காக வெற்றிலை தாம்பூலம் போட தொடங்கியது.

இதில் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இரண்டு வெற்றிலையில் 5 மிளகு வைத்து மென்று சாப்பிடுவதால் உடல் எடையை குறையும் என கூறப்படுகிறது.

வெற்றிலையை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் குணமாகும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையை லேசாக வதக்கி நெஞ்சுப் பகுதியில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.

வெற்றிலையுடன் பாக்கு கலந்து சாப்பிடுவது நல்லது ஆனால் வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவதால் வாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெற்றிலையை விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பற்று போட்டு வர கீழ்வாதம் குணமாகும். குறிப்பாக வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் குறைய வெற்றிலையில் குறைவாக வாக்கு சேர்த்து மெல்லலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of vetrilai pakku


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->