உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு எல் பொரியல்...!
Banana Stem ellu priyal is healthy body
வாழைத்தண்டு எள் பொரியல்...உடலுக்கு ஆரோக்கியம்தரும் எள்...இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நம்மைகள் ஏற்படும்.
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வாழைத்தண்டு 1 கப்
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு அரை டீஸ்பூன்
வெங்காயம் அரை கப்
உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
தயிர் 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
நிலக்கடலை 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை :
நிலக்கடலையை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், வாழைத்தண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு வாழைத்தண்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி தண்டு ஓரளவு வெந்ததும் தயிர், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.தண்டு வெந்ததும் இறுதியாக வெள்ளை எள், தேங்காய் துருவல், நிலக்கடலை பொடி சேர்த்து 1 நிமிடம் அப்படியே வைத்து பின் இறக்கி பரிமாறவும். இப்போது சுவையான வாழைத்தண்டு எள் பொரியல் தயார்.
English Summary
Banana Stem ellu priyal is healthy body