உங்களுக்கு முதுகு வலி இருக்கா? அப்போ இந்த முத்திரை உதவும்..!
Annusana Muthra For Back pain
தற்போதுள்ள சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தான் வேலை செய்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதுகுதண்டை திடப்படுத்தும் முத்திரை செய்து வர வலி ஏற்படும் வாய்ப்பு குறையும்.
அனுசான முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும்.ஆள்காட்டி விரலை மேல் நோக்கி செலுத்தவும்.

இந்த முத்திரையை காலை மாலை செய்து வர முதுகுதண்டு பலம்பெறும் இந்த முத்திரையை செய்வதுடன் நேராக நிமிர்ந்து அமர்வதையும் பழகி கொண்டால் நல்ல பலன் தரும்.
English Summary
Annusana Muthra For Back pain