நவீனப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்... நாவலாசிரியர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழி கவிஞர்...

சிறுகதை எழுத்தாளர்... நாவலாசிரியர்...

நவீனப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்...

தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்...

நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர்...

பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்...

கவிதை, சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பட பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி...

இவர் தான்.... 

ஆண்டாள் பிரியதர்சினி:

பிறப்பு :

பல படைப்புகளை படைத்த ஆண்டாள் பிரியதர்சினி, அக்டோபர் 5ஆம் தேதி 1962ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கவிஞர் ஆ.கணபதி புலவர்-சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். 

சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும், முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

திருமணம் :

ஆண்டாள் பிரியதர்சினியின் கணவர் கவிஞர் பால ரமணி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

எழுத்துப்பணி :

இவர் கவிஞர் மட்டுமன்றி, கட்டுரையாளர், சிறுகதையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்ற பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. 

ஆண்டாள் பிரியதர்சினி கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு என இதுவரை பல படைப்புகளை படைத்துள்ளார்.

சாகித்ய அகாதமி பெண் படைப்பாளர் படைப்புகள் தொகுதியில் இவரது சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.

பெண் கவிஞர்களின் தொகுப்பு நூலான பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

பெண்ணிய கவிஞராகவும், பெண்ணிய எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டார். பெண்ணிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதைத் தன் பாணியாக அமைத்துக் கொண்டுள்ளார். பெரும்பான்மையான கதைகளில் கதாநாயகியாக சரஸ்வதியைப் படைத்து, சரஸ்வதி மூலம் பெண் விடுதலையை சாத்தியமாக்க முனைந்துள்ளார். தமிழ் எழுத்துலகில் எந்த எழுத்தாளரும் எடுக்காத வித்தியாசமான முயற்சி இது. 

விருதுகளும், பட்டங்களும் :

2000ஆம் ஆண்டு கவிதைகளுக்காக கவிஞர் வைரமுத்து விருது.

தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது.

உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது.

கழிவு சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை விருது.

சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது.

துகனம் புதினத்திற்காக காசியூர் ரங்கம்மாள் விருது.

சாண அடுப்பும், சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது. 

நெல்லை இலக்கிய வட்டம் எழுத்துலகச்சிற்பி பட்டம் வழங்கியுள்ளது.

தேனீ இலக்கிய கழகம் கவிச்செம்மல் பட்டம் வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andal priyadharshini history in Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->