பாதாம் கீர்... உங்க வீட்டு விருந்தாளிகளுக்கு அசத்தலான ஒரு ஸ்வீட் ரெடி...!
Almond Kheer delicious sweet treat for your guests is ready
பாதாம் கீர்...வேளைக்கு போற உங்க கணவருக்கு செஞ்சு குடுத்து விடுங்க ...இதை சாப்டுட்டு வேலைய சூப்பரா செய்வாங்க
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாதாம் பருப்பு ஒரு கப்
பிஸ்தா பருப்பு அரை கப்
சீனி முக்கால் கப்
பால் 4 கப்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
ஏலக்காய் 3
கேசரி பவுடர் 2 சிட்டிகை

செய்முறை :
பாதாம் பருப்புகளை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். பாதாம் பருப்புகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். ஏலக்காயை இடித்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சாறு எடுக்கவும். பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பாத்திரத்தில் அரைத்த பாதாம் பால், ஏலக்காய் சாறு ஊற்றி அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர், குங்குமப்பூ, மீதியுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் வரை கரண்டியால் கலக்கிவிட்டு பிறகு பொடியாக நறுக்கிய பிஸ்தாவை அத்துடன் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.பின் அதனை பாட்டில்கலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும். இப்போது சுவையான ஜில்லென்ற பாதாம் கீர் தயார்.
English Summary
Almond Kheer delicious sweet treat for your guests is ready