கத்திரி வெயில்.. எதை செய்யலாம்.. எதை செய்யக்கூடாது.? - Seithipunal
Seithipunal


சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை 'அக்னி". அதனால் இந்த நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நேரமானது அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றது.

அட்மின் நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். அக்னி நட்சத்திர தாக்கத்தில் இருந்து நம்மை காக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி பார்க்கலாம். 

அக்னி நட்சத்திர நாட்களில் சிவாலயங்களில் தாரா அபிஷேகம் செய்வது நல்லது. தாரா பாத்திரம் என்ற பாத்திரத்தை சிவலிங்கத்தின்மேல் தொங்கவிட்டு, இடைவிடாமல் நீர் விழ வைப்பதே தாரா அபிஷேகம். இந்நாட்களில் அதிகாலை துயிலெழுந்து, நீராடி சூரிய பூஜை செய்யலாம். சூரிய நமஸ்காரம் செய்வதும் நல்லது.

சித்திரை மாதத்தில் குடை, விசிறி, பாதரட்சைகள் தானம் செய்யலாம். இந்த கோடை வெயிலின் அக்னி காற்று நோயை பரப்பும். அதனால் தினமும் குடத்தில் மஞ்சள் நீர் கரைத்து அதில் வேப்பிலையை நனைத்து வீடு முழுவதும் தெளிக்கலாம். அம்மனுக்கு மிகவும் உகந்த வேப்பிலை குளிர்ச்சி மிக்கது. இளநீர், தர்ப்பூசணி, நீர் மோர் ஆகியவை உடல் சூட்டைத் தணிக்க உதவும்.

சித்திரை வெயிலில் இருந்து விடுபட மகாவிஷ்ணுவை சாந்தப்படுத்த வேண்டும். அதேபோல் அம்மனையும் குளிரச் செய்ய வேண்டும். பால், தயிர், இளநீர், வேப்பிலை கலந்த மஞ்சள் நீர் அக்னி தேவனின் வெம்மையைக் குறைக்க உதவும். அதேசமயம் அம்மனின் அருளும் கிட்டும்.

இந்த அக்னி நட்சத்திர நாளில் தினமும் தலைக்குக் குளித்து, பின் தயிர் சாதம், நீர் மோர், பானகம் மற்றும் நம்மால் இயன்ற நிவேதனப் பொருட்களை மகாவிஷ்ணுவிற்குப் படைத்துவிட்டு, அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கலாம். நாராயண மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்து அன்னதானம் செய்யலாம்.

மாரியம்மனை குளிர்விக்கும் சீதாஷ்டக சுலோகத்தை பாராயணம் செய்யலாம். அக்னி நட்சத்திரத்தின் வெம்மை நம்மை தாக்காமல் இருக்க, தினமும் காலை வேளையில், பூஜையறையில் சூரியனுக்கு உரிய மாக்கோலமிட்டு, சூரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agni natchathiram 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->