சுவையான 'சர்க்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை' இப்படி செய்து பாருங்க.!
sweet potato kozhukattai recipe in tamil
சுவையான சர்க்கரை வழி கிழங்கு கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளி கிழங்கு
கோதுமை மாவு
தேங்காய் துருவல்
நாட்டுச் சர்க்கரை
பட்டை தூள்
ஏலக்காய் தூள்
நெய்
செய்முறை:
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு தோல் உரித்து மசித்து அதனுடன் கோதுமை மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டுச் சர்க்கரை பட்டை தூள் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு உருண்டையை எடுத்து நன்றாக விரித்து கொள்ளவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ளதை அதில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கொழுக்கட்டை தயார்.
English Summary
sweet potato kozhukattai recipe in tamil