தித்திக்கும் சுவையில் 'செவ்வாழைப்பழ கேசரி' எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்.!
Red Banana Kesari Recipe In Tamil
தேவையான பொருட்கள்:
ரவை
செவ்வாழை
சர்க்கரை
கலர் பவுடர்
வெண்ணிலா எசன்ஸ்
ஏலக்காய் தூள்
முந்திரி
திராட்சை
நெய்
செய்முறை:
முதலில் செவ்வாழைப்பழத்தை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடைப்பில் வைத்து ரவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு நெய் விட்டு வறுத்த ரவையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலந்து விடவும். ரவை வெந்து வந்ததும் சிகப்பு கலர் பவுடர் தேவையான அளவு நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள செவ்வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும். செவ்வாழைப்பழம் ரவை நன்கு விந்து வந்ததும் வெண்ணிலா எசன்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் விட்டுவிட்டு நெய் ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் அவ்வளவுதான் சுவையான செவ்வாழைப்பழ கேசரி தயார்.
English Summary
Red Banana Kesari Recipe In Tamil