ஆரோக்கியமான ''ராகி லட்டு'' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!  - Seithipunal
Seithipunal


ஆரோக்கியம் நிறைந்த சுவையான ராகி லட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
ராகி மாவு 
உப்பு 
வருத்த வேர்க்கடலை 
வெல்லம் 

செய்முறை: 
முதலில் ராகி மாவை ஒரு பவுலில் சேர்த்து சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 

அடுப்பில் தோசை கல்லை வைத்து பிசைந்து வைத்துள்ள மாவை அடை போல் தட்டி இரண்டு புறமும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

ராகி அடை சிறிது நேரம் ஆறி வைத்து பிறகு சிறு சிறு துண்டுகளாக பிச்சி எடுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து பிச்சி வைத்துள்ள அடையில் சேர்த்துக் கொள்ளவும். 

பிறகு வெல்லத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவ்வளவுதான் சுவையான ராகி லட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragi laddu recipe in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->