வாயில் எச்சில் ஊற வைக்கும் ''புளிச்சக்கீரை தொக்கு'' இப்படி ட்ரை பண்ணுங்க.!
Pulicha Keerai Thokku In Tamil
சுவையான புளிச்சக்கீரை தொக்கு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புளிச்சக்கீரை
உப்பு
நல்லெண்ணெய்
வரமிளகாய்
கடுகு
வெந்தயம்
பூண்டு
புளிகரைச்சல்
செய்முறை:
முதலில் புளிச்சக் கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வர மிளகாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிச்சக்கீரை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து எடுத்த கடுகு, வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் புளிச்சக்கீரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான புளிச்சக்கீரை தொக்கு தயார்.
English Summary
Pulicha Keerai Thokku In Tamil